நாங்கள் என்ன செய்கிறோம்

  • தென்னிந்தியாவில் உள்ள அடிமட்ட அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் சமூகங்களுக்கு அவர்களின் சுற்றுப்புறத்தில் வரஇருக்கும் நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் பற்றிய அறிவிப்பை தெரிவித்தல் மற்றும் கேட்கப்பட்டால் அந்நிலையத்தின் EIA தொடர்பான ஆவணங்களை பகிர்ந்து கொள்ளல்
  • தொழில்நுட்ப வல்லுநர், சுற்றுச்சூழல் வழகறிஞர் மற்றும் பொருளாதார நிபுணர்கொண்ட ஒரு நிபுணர்குழுவின் உதவியுடன், ஒரு மின் உற்பத்தி நிலையத்தின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு மற்றும் வரையறுக்கப்பட்டுள்ள பாதிப்பு குறைப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றைப் பற்றிய தொழில்நுட்ப மதிப்பீடு செய்தல். இந்த மதிப்பீடு தகவல்களை, அடிமட்ட அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் சமூகங்கள் பயன்படுத்திக் கொள்ள உதவியாக அவற்றிற்கு அளித்தல்
  • தகவல் கையேடுகள் விநியோகம் மற்றும் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடமொழி போஸ்டர்கள் வழியாக அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் சமூகங்களிடம் EIA செயல்முறை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்
  • ஒரு அனல் மின் நிலையத்தால் பாதிக்கப்பட்ட/ பாதிக்கப்படும் சாத்தியமுள்ள அரசு சாரா நிறுவனங்கள் மற்றும்நபர்களிடம் EIA செயல்முறையின் போது ஒவ்வொரு நிலையிலும் கடைபிடிக்கக்கூடிய சாத்தியமான செயல்பாடுகளை தெரிவித்து வலிமைப்படுத்தல்
  • தென்னிந்தியாவில் உள்ள அனல் மின் நிலையங்கள் பற்றிய செய்திகளை தாங்கிவரும் ஸ்டாப்வாட்ச் என்ற மாதாந்திர மின்னஞ்சல்-செய்திகடிதத்தை வெளியிடுதல். இதனை சுற்றுச்சூழல் மற்றும் நுகர்வோர் அமைப்புகள், கிராம பிரதி நிதிகள் மற்றும் ஊடகப் பிரதி நிதிகள் உள்ளிட்ட 1000 பேருக்குமேல் வாசிக்கின்றனர்.